Friday, 29 August 2014

SRM பல்கலை கழகத்தில் 25.8.2014அன்று கணேசன் அரங்கில் தமிழ்ப் பேராயம் விருது வழங்கல் விழா நடை பெற்றது . துறை சார்ந்து உழைத்து வரும் பெரு மக்களை சிறப்பிக்கும் வண்ணம் தேர்வு செய்யப்படுகின்றனர்.இந்த ஆண்டு
 புதுமைபித்தன் விருதினை பூமணி க்கும் ,
ஆனந்த குமாரசாமி விருதினை இந்திரனுக்கும்
 முத்துத்தாண்டவர்  இசை விருதை  சோழநாட னுக்கும் 
மொழி பெயர்ப்புக்கான விருது ஸ்ரீ ராமுக்கும் 
 மருத்து வத்திற்கான விருது நரேந்திரனுக்கும் ,
வாழ் நாள் சாதனையாளர் விருது பாரா விற்கும் ஜார்ஜ் ஹார்ட் க்கும் 
வழங்கப்பட்டது. பார்வைக்கு

Saturday, 23 August 2014

தமிழ்ப்பேராய விருதுகள் - 2014


பால சாகித்ய அகடமி’ விருது

2014ஆம் ஆண்டிற்கான ’பால சாகித்ய அகடமி’ விருது இரா.நடராசனுக்கு வழங்கப்பட்டுள்ளது. பால சாகித்ய அகடமி விருது என்பது சிறுவர் இலக்கியத்திற்காக வழங்கப்படும் சாகித்ய அகடமி விருது. ’விஞ்ஞான விக்ரமாதித்தன் கதைகள்’ தொகுப்பிற்காக வழங்கப்பட்டுள்ளது.

இரா. நடராசன் பற்றிய முழுவிவரம்

ஆயிஷா இரா, நடராசன் (பி,1964)
தமிழில் சிறுகதை. நாவல். மொழிபெயர்ப்பு அறிவியல் நூல்கள் என அனைத்து தளங்களிலும் இயங்கிவரும் முன்னனி எழுத்தாளர் என்றாலும் குறிப்பாக சிறுவர் இலக்கிய படைப்பாளியாக கடந்த இருபதாண்டுகளாக தீவிரமாக செயல்பட்டு வருகிறார், இவரது ஆயிஷா எனும் குறுநாவல் (பள்ளிக்கூட சிறுமியின் துயரக்கதை) தமிழில் ஒரு லட்சம் பிரதிகள் விற்பனையாகி சாதனை படைத்தது கல்வித் துறையில் பல புதிய மாற்றங்களை அது முன்மொழிந்தது,

• நாகா, மலர் அல்ஜிப்ரா,ரோஸ், ஒரு தோழனும் மூன்று நண்பர்களும், ஒரு தோழியின் கதை,ரஃப் நோட்டு போன்றவை சிறுவர்களுக்கான இவரது நாவல் படைப்புகள்,

• சர்க்கஸ் டாட்காம், பூஜ்ஜியமாம் ஆண்டு, விஞ்ஞான விக்கிரமாதித்தன் கதைகள்,பூமா, விண்வெளிக்கு ஒருபுறவழிசாலை. ஆகியவை இவரது அறிவியல் புனை கதைகள்,

• பார்வையற்ற குழந்தைகளும் வாசிக்கும் வண்ணம் தமிழின் முதல் முயற்சியாக இவரது 'பூஜ்ஜியமாம் ஆண்டு' நாவல் பிரைல் மொழியிலும் வெளிவந்துள்ளது,

• நீங்களும் விஞ்ஞானி ஆக விரும்புகிறீர்களா உட்பட சிறுவர்களுக்கான முப்பத்தாறு அறிவியல் நூல்களை இதுவரை படைத்திருக்கிறார்,

• நவீன பஞ்சதந்திர கதைகள். நத்தைக்கு எத்தனைக் கால் போன்றவை குழந்தைகளுக்கான நவீன கதையாடல்,

• உலகிலேயே மகிழ்ச்சியான சிறுவன். நீ எறும்புகளை நேசிக்கிறாயா. ஃபீனிக்ஸ் (அறிவியல் நாடகங்கள்) .நம்பர் பூதம். குண்டுராஜா 1.2.3.இரவு பகலான கதை போன்றவை அவரது சிறுவர் இலக்கிய மொழிபெயர்ப்புகள்

• டார்வின். பாரடே. மேரிகியூரி.கலீலியோ ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகளை சிறுவர்கள் மேடையேற்றும் ஓரங்க நாடகங்களாக இவர் படைத்துள்ளார்.

• ஆயிஷா, ஒரு தோழனும் மூன்று நண்பர்களும் எனும் நாவல் உலகப்பெண் விஞ்ஞானிகள், வரலாறு மறந்த விஞ்ஞானிகள் ஆகிய அறிவியல் நூல்கள் உட்பட இவரது பல சிறுவர் இலக்கிய படைப்புகள் மலையாளம், தெலுங்கு, கொங்கனி, ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழியிலும் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன.

சிறந்த கல்வியாளராக அறியப்பட்டுள்ள இவர் சமீபத்தில் எழுதிய ‘இதுயாருடைய வகுப்பறை’ எனும் புத்தகம் சென்னை புத்தக கண்காட்சி உட்பட தமிழகத்தின் புத்தக கண்காட்சிகளில் தொடர்ந்து விற்பனையில் சாதனை படைத்து வருகிறது.

ஏற்கனவே தனது *கணிதத்தின் கதை* நூலுக்கு தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை விருது பெற்றவர்,கடலூரில் கிருஷ்ணசாமி நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக இரா,நடராசன் பணியாற்றி வருகிறார். கடந்த 12 ஆண்டுகளாக தொடர்ந்து புத்தகங்களுக்காவே வெளிவரும் 'புத்தகம் பேசுது' ஆசிரியராக இருந்து வருகிறார்.
          இன்னும் பல படைப்புகள் படைக்க வாழ்த்துகள்

Friday, 22 August 2014

தமிழுக்குரிய அடைமொழிகள் - 4

  • துளங்கில்  தமிழ்  (சம்பந்தர் 13)
  • தெய்வத்  தமிழ் 
  • தெய்வத்  திருத் தமிழ்   
  • தெரி தமிழ்   (திருப்புகழ் 592)
  • தெள்ளு தமிழ்   (தனிப்பா செந்தமிழ்ச்செல்வம் 45, கனிச்சாறு1 பக் 11,திருப்புகழ் 619-1290 ,கவியோகி)
  • தெள்ளுற்ற தமிழ்   (பாரதியார்)
  • தெளி தமிழ்   (பாரதிதாசன்)
  • தெனி தரு முத்தமிழ்   (கந்தர் அந்தாதி 25)
  • தென் தமிழ்   (சம்பந்தர் 218 -7)
  • தென்னன் தமிழ்   (திவ்வியப்பிரபந்தம் 2674 திருவிசைப்பா 24-3)
  • தேக்குறு தமிழ்    (கந்தர் அந்தாதி 2-26-4)
  • தேமரு தமிழ்    ( செந்தமிழ்ச்செல்வம் 1)
  • தேன் ஆர் இன்சொல் தமிழ்    (வில்லிப்பாரதம் 1277)
  • தேன் தமிழ்    (  கனிச்சாறு1 பக் 109)
  • தேன்  நேர் ஆர் தமிழ்   (சம்பந்தர் 126)
  • தேன் பொழியும் தமிழ் 
  • தேனினும் இனிய தமிழ் 
  • தேனினும் இனியநற் செந்தமிழ் (கா.நமச்சிவாயர்)
  • தொல் தமிழ்
  • நயத் தமிழ்
  • நல்ல செந்தமிழ்   (சம்பந்தர் 218)
  • நல்ல தமிழ்   (சம்பந்தர் 327)
  • நல்லவாய இன்தமிழ்   (சம்பந்தர் 308)
  • நல்லிசைத் தமிழ்  (திவ்வியப்பிரபந்தம் 718)
  • நல்லியனின் தமிழ்  (திவ்வியப்பிரபந்தம் 751)
  • நலங்கொள் தமிழ்  (சம்பந்தர் 14)
  • நலத் தமிழ்  (சுந்தரர் 3-10,55-4)
  • நற்றமிழ்  (திவ்வியப்பிரபந்தம் 697,சுந்தரர் 53-10,சமபந்தர் 39,44)
  • நறுந் தமிழ் 
  • நாடவல்ல தமிழ்  (சம்பந்தர் 281,283)
  • நிலைப்புற்ற தமிழ்  (தமிழியக்கம் 106)
  • நீண்ட தமிழ்  (கம்பர்)
  • பசுந் தமிழ்  (கனிச்சாறு 1 பக் 10)
  • படமலிதமிழ்  ( சம்பந்தர் 121)
  • பண் ஆர் இன்  தமிழ் 
  • பண் கொ தமிழ் 

Thursday, 21 August 2014

12வது உலகத்தமிழ்ப் பண்பாட்டு மாநாடும் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் 40வது ஆண்டு நிறைவு விழாவும்



தமிழுக்குரிய அடைமொழிகள் - 3

  • சீரார்ந்த தமிழ்  (திவ்வியப் பிரபந்தம் 740)
  • சீரின் மலி செந்தமிழ்  (சம்பந்தர் 333)
  • சுவைத்தமிழ்
  • செஞ் சொற்றமிழ்  (சுந்தரர் 42)
  • செந்தண்டமிழ்  (சம்பந்தர்  182)
  • செந்தமிழ்  (சம்பந்தர் 41,மலரும் மாலையும் 1258)
  • செப்பரியதண்டமிழ்  (சம்பந்தர் 100)
  • செம்மைத்தமிழ் 
  • செய்யதமிழ்  (வேதாந்த தேசிகர், மலரும் மாலையும் 1057)
  • செல்வச் செந்தமிழ்  (புலவர் ப. கோவிந்தன்)
  • செறிதரு தமிழ் ( திருவலஞ்சுழி மும்மணிக் கோவை)
  • செறிவண்டமிழ்  (சம்பந்தர் 199)
  • சொல்லார் தமிழ்  (சம்பந்தர்  31,171)
  • சொல் வழுவாத ஒண்டமிழ்  (திவ்யப்பிரபந்தம் 3083)
  • சொற்றமிழ்  (சம்பந்தர்  274)
  • ஞாலம் அளந்த மேன்மைத் தமிழ்  (பெரிய புராணம்)
  • ஞாலம் மல்குந்  தமிழ்  (சம்பந்தர் 212)
  • ஞாலம் மிக்க   தண்டமிழ்  (சம்பந்தர் 51)
  • ஞானத்  தமிழ்  (சம்பந்தர் 117-12 ,திருப்புகழ்718,திவ்வியப்பிரபந்தம் 2182)
  • தக்க தென்  தமிழ்  (சம்பந்தர் 218-7)
  • தகு தமிழ்  (சம்பந்தர் 13)
  • தகை மலி   தண்டமிழ்  (சம்பந்தர் 44)
  • தண்டமிழ்  (சுந்தரர் 84-10)
  • தண்ணார்  தமிழ்  (திருவாசகம் 8 -10)
  • தலமார் தரு செந்தமிழ்  (சம்பந்தர் 160)
  • தவம் மல்கு தமிழ்  (சம்பந்தர் 112)
  • தன்னேர் இலாத  தமிழ்  (தமிழியக்கம் 90)
  • தனித்  தமிழ்  
  • திணை கொள் செந்தமிழ்  (சுந்தரர் 18-10)
  • தித்திக்கும் செந்தமிழ்  (மலரும் மாலையும் 1043)
  • தித்திக்கும் தமிழ் 
  • திரிசங்கத் தமிழ்  (திருபுகழ் 69)
  • திருத்தமிழ்  (கந்தபுராணம் 4-13-231)
  • திருந்து தமிழ்  (சிவப்பிராகாசர் தனிப்பா)
  • திரு நெறித்தமிழ்
  • திரு நெறிய தமிழ்  (சம்பந்தர் 1)
  • திரு மலிந்த தமிழ்  (தமிழியக்கம்)
  • திஞ்சுவைத் தமிழ் 
  • தீதிலா ஒண்டமிழ்  (திவ்வியப்பிரபந்தம் 3567)
  • தீந்தமிழ்  (தமிழியக்கம் 108)
  • துய்ய தமிழ்  (தனிப்பா)

Wednesday, 20 August 2014

ம.சோ.விக்டர் அவர்களின் சொல்லாய்வு நூல்கள் | விருபா

ம.சோ.விக்டர் அவர்களின் சொல்லாய்வு நூல்கள் | விருபா

கவி நிலவு பழநிபாரதியின் கவிதை

பிராபகரப் பிஞ்சே
மதிவதனிப் பிறையே
உன்னைச் சுற்றிலும் அடுக்கிவைக்கப்பட்டிருந்த
மணல் மூட்டைகளில்
மனிதக் கடலின் ஈரம் 
வற்றிப்போயிருந்தது
ஈரம் வற்றியது அறியாமல்
வாய் திறந்து தவித்த மீன்குஞ்சுகள்
உன் கண்களில் துடித்தன
மரணத்தின் நதிச்சுழலை
மீன்கள்
அவ்வளவு அமைதியாய்க்
கடக்குமா என்ன
அது எரிமலையின் முன்னமைதியா
பெரும் புயலின் பின்னமைதியா
தெரியவில்லை
திக்கற்ற தமிழர்களின்
வெள்ளந்திக் கண்கள்
உன்னுடையதாயிருந்தன
அங்கே
காணாமல் போன
உன் சக விளையாட்டுப் பிள்ளைகளின்
தனிமை
உன்னைச் சூழ்ந்திருந்தது
'ஊமையானது கோயில்மணி
உறைக்குள்ளே போனது நாதஸ்வரம்'
என்றான் புதுவை இரத்தினதுரை
உன் அமைதி ஆலயமணிகளை
உலுக்குகிறது
உன் மூச்சில்
ஆயிரம் நாதஸ்வரங்கள்
சைவத் துணியான
போதிமர நிழலெடுத்து
துறவாடை அணிந்துகொண்டவர்களையும்
தலைப்பாகை கட்டிக்கொண்டவர்களையும்
முக்காடு போட்டுக்கொண்டவர்களையும்
உன் அமைதி
உற்றுக் கவனித்துக்கொண்டிருக்கிறது
மூடப்பட்ட உன் கண்கள்
மீண்டும் எப்படி
இப்படிப் பிரகாசிக்கின்றன என்று
அவர்கள்
உன்னைக் கவனித்துக்கொண்டிருக்கிறார்கள்
நீ உன்னோடு மரித்த
இலட்சம் குழந்தைகளோடு
ஒளியுடன்
விளையாடிக்கொண்டிருக்கிறாய்
- பழநிபாரதி

Thursday, 14 August 2014

சுதந்திரம் அறிவோம்

01 சுதந்திரப் பெருமை 

( தில்லை வெளியிலே கலந்துவிட்டாலவர் 
திரும்பியும் வருவாரோ? என்னும் வர்ணமெட்டு) 

வீர சுதந்திரம் வேண்டிநின்றார் பின்னர் 
வேறொன்று கொள்வாரோ? - என்றும் 
ஆரமு துண்ணுதற் காசைகொண்டார் கள்ளில் 
அறிவைச் செலுத்துவா ரோ? (வீர) 

புகழுநல் லறமுமே யன்றியெல் லாம்வெறும் 
பொய்யென்று கண்டாரேல் - அவர் 
இகழுறும் ஈனத்தொண் டியற்றியும் வாழ்வதற்கு 
இச்சையுற் றிருப்பா ரோ? (வீர) 

பிறந்தவர் யாவரும் இறப்ப துறுதியெனும் 
பெற்றியை அறிந்தாரேல் - மானம் 
துறந்தரம் மறந்தும்பின் உயிர்கொண்டு வாழ்வது 
சுகமென்று மதிப்பா ரோ? (வீர) 

மானுட ஜன்மம் பெறுவதற் கரிதெனும் 
வாய்மையை உணர்ந்தாரேல் - அவர் 
ஊனுடல் தீயினும் உண்மை நிலைதவற 
உடன்படு மாறுளதோ? (வீர) 

விண்ணி லிரவிதனை விற்றுவிட் டெவரும்போய் 
மின்மினி கொள்வாரோ? 
கண்ணினும் இனிய சுதந்திரம் போனபின் 
கை கட்டிப் பிழைப்பாரோ? (வீர) 

மண்ணிலின் பங்களை விரும்பிச் சுதந்திரத்தின் 
மாண்பினை யிழப்பாரோ? 
கண்ணிரெண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினால் 
கைகொட்டிச் சிரியா ரோ? (வீர) 

வந்தே மாதரம் என்று வணங்கியபின் 
மாயத்தை வணங்கு வாரோ? 
வந்தே மாதரம் ஒன்றே தாரகம் 
என்பதை மறப்பாரோ? (வீர) 

---- 

02. சுதந்திரப் பயிர் 

தண்ணீர்விட் டோ வளர்த்தோம்? சர்வேசா! இப்பயிரைக் 
கண்ணீராற் காத்தோம்; கருகத் திருவுளமோ? 

எண்ணமெலாம் நெய்யாக எம்முயிரி னுள்வளர்ந்த 
வண்ண விளக்கிஃது மடியத் திருவுளமோ? 

ஓராயிர வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர் 
வாராது போலவந்த மாமணியைத் தோற்போமோ? 

தர்மமே வெல்லுமேனும் சான்றோர்சொல் பொய்யாமோ? 
கர்ம விளைவுகள் யாம் கண்டதெலாம் போதாதோ? 

மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும் 
நூலோர்கள் செக்கடியில் நோவதுவுங் காண்கிலையோ? 

எண்ணற்ற நல்லோர் இதயம் புழுங்கியிரு 
கண்ணற்ற சேய்போற் கலங்குவதுங் காண்கிலையோ? 

மாதரையும் மக்களையும் வன்கண்மை யாற்பிரிந்து 
காத லிளைஞர் கருத்தழிதல் காணாயோ? 

எந்தாய்! நீ தந்த இயற்பொருளெ லாமிழந்து 
நொந்தார்க்கு நீயன்றி நோவழிப்பார் யாருளரோ? 

இன்பச் சுதந்திரம்நின் இன்னருளாற் பெற்றதன்றோ? 
அன்பற்ற மாக்கள் அதைப்பறித்தாற் காவாயோ? 

வான்மழை யில்லையென்றால் வாழ்வுண்டோ ?எந்தை சுயா 
தீனமெமக் கில்லை யென்றால் தீனரெது செய்வோமே? 

நெஞ்சகத்தே பொய்யின்றி நேர்ந்ததெலாம் நீ தருவாய் 
வஞ்சகமோ எங்கள் மனத்தூய்மை காணாயோ? 

பொய்க்கோ உடலும் பொருளுயிரும் வாட்டுகிறோம்? 
பொய்க்கோ தீராது புலம்பித் துடிப்பதுமே? 

நின்பொருட்டு நின்னருளால் நின்னுரிமையாம் கேட்டால், 
என்பொருட்டு நீதான் இரங்கா திருப்பதுவோ? 

இன்று புதிதாய் இரக்கின்றோ மோ? முன்னோர் 
அன்றுகொடு வாழ்ந்த அருமையெலாம் ஓராயோ? 

நீயும் அறமும் நிலத்திருத்தல் மெய்யானால் 
ஓயுமுனர் எங்களுக்கிவ் ஓர்வரம் நீ நல்குதியே. 

------ 

03 சுதந்திர தாகம் 

ராகம் - கமாஸ் தாளம் - ஆதி 

என்று தணியும் இந்தச் சுதந்திர தாகம்? 
என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்? 
என்றெம தன்னைகை விலங்குகள் போகும்? 
என்றெம தின்னல்கள் தீர்ந்துபொய் யாகும்? 
அன்றொரு பாரதம் ஆக்கவந் தோனே! 
ஆரியர் வாழ்வினை ஆதரிப் போனே! 
வென்றி தருந்துணை நின்னரு ளன்றோ? 
மெய்யடி யோம்இன்னும் வாடுதல் நன்றோ? 

பஞ்சமும் நோயும்நின் மெய்யடி யார்க்கோ? 
பாரினில் மேன்மைகள் வேறினி யார்க்கோ? 
தஞ்ச மடைந்தபின் கை விடலோமோ? 
தாயுந்தன் குழந்தையைத் தள்ளிடப் போமோ? 
அஞ்சலென் றருள் செயுங் கடமை யில்லாயோ? 
ஆரிய! நீயும்நின் அறம்மறந் தாயோ? 
வெஞ்செயல் அரக்கரை வீட்டிடு வோனோ! 
வீர சிகாமணி! ஆரியர் கோனே! 

----- 
04 சுதந்திர தேவியின் துதி 

இதந்தரு மனையின் நீங்கி 
இடர்மிகு சிறப்பட் டாலும் 
பதந்திரு இரண்டும் மாறிப் 
பழிமிகுந் திழிவுற் றாலும் 
விதந்தரு கோடி இன்னல் 
விளைந்தெனை அழித்திட் டாலும் 
சுதந்திர தேவி! நின்னைத் 
தொழுதிடல் மறக்கி லேனே. 

நின்னருள் பெற்றி லாதார் 
நிகரிலாச் செல்வ ரேனும், 
பன்னருங் கல்வி கேள்வி, 
படைத்துயர்ந் திட்டா ரேனும், 
பின்னரும் எண்ணி லாத 
பெருமையிற் சிறந்தா ரேனும், 
அன்னவர் வாழ்க்கை பாழாம், 
அணிகள்வேய் பிணத்தோ டொப்பார். 

தேவி! நின்னொளி பெறாத 
தேயமோர் தேய மாமோ? 
ஆவியங் குண்டோ ? செம்மை 
அறிவுண்டோ ? ஆக்க முண்டோ ? 
காவிய நூல்கள் ஞானக் 
கலைகள் வேதங்க ளுண்டோ ? 
பாவிய ரன்றோ நிந்தன் 
பாலனம் படைத்தி லாதார்? 

ஒழிவறு நோயிற் சாவார், 
ஊக்கமொன் றறிய மாட்டார், 
கழிவுறு மாக்க ளெல்லாம் 
இகழ்ந்திடக் கடையில் நிற்பார் 
இழிவறு வாழ்க்கை தேரார், 
கனவிலும் இன்பங் காணார், 
அழிவுறு பெருமை நல்கும் 
அன்னை! நின் அருள் பெறாதார். 

வேறு 

தேவி! நின்னருள் தேடி யுளந்தவித்து 
ஆவி யுந்தம தன்பும் அளிப்பவர் 
மேவி நிற்பது வெஞ்சிறை யாயினும் 
தாவில் வானுல கென்னத் தகுவதே. 

அம்மை உன்றன் அருமை யறிகிலார் 
செம்மை யென்றிழி தொண்டினைச் சிந்திப்பார், 
இம்மை யின்பங்கள் எய்துபொன் மாடத்தை 
வெம்மை யார்புன் சிறையெனல் வேண்டுமே. 

மேற்றிசைப்பல நாட்டினர் வீரத்தால் 
போற்றிநினைப் புதுநிலை யெய்தினர், 
கூற்றினுக்குயிர் கோடி கொடுத்தும்நின் 
பேற்றினைப்பெறு வேமெனல் பேணினர். 

அன்னை தன்மைகொள்நின்னை அடியனேன் 
என்ன கூறிஇசைத்திட வல்லனே 
பின்ன முற்றுப் பெருமை யிழந்துநின் 
சின்ன மற்றழி தேயத்தில் தோன்றினேன். 

பேர றத்தினைப் பேணுதல் வேலியே! 
சோர வாழ்க்கை, துயர் மிடி யாதிய 
கார றுக்கக் கதித்திடு சோதியே! 
வீர ருக்கமு தே! நினை வேண்டுவேன். 

---- 

05. விடுதலை 

ராகம் - பிலகரிவிடுதலை 

விடுதலை! விடுதலை! விடுதலை! 

பறைய ருக்கும் இங்கு தீயர் 
புலைய ருக்கும் விடுதலை 
பரவ ரோடு குறவருக்கும் 
மறவ ருக்கும் விடுதலை! 
திறமை கொண்டதீமை யற்ற 
தொழில் புரங்ந்து யாவரும் 
தேர்ந்த கல்வி ஞானம் எய்தி 
வாழ்வம் இந்த நாட்டிலே. (விடுதலை) 

ஏழை யென்றும் அடிமையென்றும் 
எவனும் இல்லை ஜாதியில், 
இழிவு கொண்ட மனித ரென்பது 
இந்தி யாவில் இல்லையே 
வாழி கல்வி செல்வம் எய்தி 
மனம கிழ்ந்து கூடியே 
மனிதர் யாரும் ஒருநிகர் கர்ச 
மானமாக வாழ்வமே! (விடுதலை) 

மாதர் தம்மை இழிவு செய்யும் 
மடமை யைக்கொ ளுத்துவோம் 
வைய வாழ்வு தன்னில் எந்த 
வகையி னும்ந மக்குள்ளே 
தாதர் என்ற நிலைமை மாறி 
ஆண்க ளோடு பெண்களும் 
சரிநி கர்ச மான மாக 
வாழ்வம் இந்த நாட்டிலே. (விடுதலை) 

----- 

06 சுதந்திரப் பள்ளு 
(பள்ளர் களியாட்டம்) 

ராகம் - வராளி தாளம் - ஆதி 

பல்லவி 

ஆடுவோமே - பள்ளுப் பாடுவோமே 
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோ மென்று (ஆடு) 

பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே - வெள்ளைப் 
பரங்கியைத் துரையென்ற காலமும் போச்சே - பிச்சை 
ஏற்பாரைப் பணிகின்ற காலமும் போச்சே - நம்மை 
ஏய்ப்போருக் கேவல்செய்யும் காலமும் போச்சே (ஆடு) 

எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு - நாம் 
எல்லோரும் சமமென்பது உறுதியாச்சு 
சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே - இதைத் 
தரணிக்கெல் லாமெடுத்து ஓதுவோமே. (ஆடு) 

எல்லோரும் ஒன்றென்னும் காலம் வந்ததே - பொய்யும் 
ஏமாற்றும் தொலைகின்ற காலம் வந்ததே - இனி 
நல்லோர் பெரியரென்னும் காலம் வந்ததே - கெட்ட 
நயவஞ்சக் காரருக்கு நாசம் வந்ததே. (ஆடு) 

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் - வீணில் 
உண்டுகளித் திருப்போரை நிந்தனை செய்வோம். 
விழலுக்கு நீர்பாய்ச்சி மாய மாட்டோ ம் - வெறும் 
வீணருக்கு உழைத்துடலம் ஓய மாட்டோ ம். (ஆடு) 

நாமிருக்கும் நாடு நமதுஎன்ப தறிந்தோம் - இது 
நமக்கே உரிமையாம் என்ப தறிந்தோம் - இந்தப் 
பூமியில் எவர்க்கும்இனி அடிமை செய்யோம் - பரி 
பூரணனுக் கேயடிமை செய்து வாழ்வோம். (ஆடு)