- இன்தமிழ்
- இன்புறுந் தமிழ்(சம்பந்தர் 214)
- இன்றமிழ் (திவ்வியப்பிரபந்தம் 1057)
- இன்னிசைச்செந்தமிழ் (சுந்தரர் 67-11)
- இனிக்குந்தமிழ் (கனிச்சாறு 1 பக் 4)
- இனிய தமிழ் (மலரும் மாலையும்)
- ஈறில் தமிழ்
- உயர் தமிழ் (தமிழியிக்கம் 12-16)
- உயிர்த்தமிழ்
- உரு ஆகும் ஒண்தமிழ் (சம்பந்தர் 150)
- உறு தமிழ் (சுந்தரர் 19-11)
- ஊறும் இன் தமிழ் (சம்பந்தர் 259)
- எழிற்றமிழ்
- என்றும் தழைத்து வரும் தமிழ் (மலரும் மாலையும்)
- என்றுமுள செந்தமிழ்
- என்றுமுள தென் தமிழ்
- ஏரினார் தமிழ் (சம்பந்தர் 288)
- ஏழிசை இன்தமிழ் (சுந்தரர் 100-10)
- ஏறுபல்பொருள் முத்தமிழ் (சம்பந்தர் 273)
- ஒண்டமிழ் (திவ்வியப்பிரபந்தம் 3127)
- ஒண் சீர் உறை தணதமிழ் (சுந்தரர் 84-10)
- ஒண் தீந்தமிழ் (கோவையார்)
- ஒப்பிலா முத்தமிழ் (அரசகேசரி)
- ஒலிகொள் இன்னிசைச் செந்தமிழ் (சுந்தரர் 67-11)
- ஒளிர் தமிழ் (சம்பந்தர் 194)
- ஓங்கிய செந்தமிழ் (தனிப்பா)
- ஓங்கு தமிழ் (கனிச்சாறு 1 பக் 109)
- கரும்பு அனைய தீந்தமிழ் (இசை 17-10)
- கலை ஆர்தமிழ்
- கலை இலங்கு தமிழ்
- கலைத் தமிழ் (தனிப்பா)
- கலைமலி தமிழ் (சம்பந்தர் 120)
- கலைமுததமிழ் (சம்பந்தர் 153-10)
- கவின் தமிழ்
- கவினார் தமிழ்
- கற்பகத் தமிழ்
- கன்னல் தமிழ்
- கன்னல் நிகர் தமிழ் (தமிழியிக்கம் 12-16)
- கன்னனித் தமிழ்
- கன்னப் பசுந் தமிழ் (செந்தமிழ்ச்செல்வம் 2)
- கனத்த செந் தமிழ் (திருப்புகழ் 949)
- கனித் தமிழ் (கனிச்சாறு 1 பக் 59)
- குலமார் தமிழ் (சம்பந்தர் 153)
- குலவேந்தர் செந்தமிழ் (சம்பந்தர் 193)
- குளிர் தமிழ் (கனிச்சாறு 1 பக் 160)
- குற்றமில் செந்தமிழ் (சம்பந்தர் 113)
- குறையாத் செந்தமிழ் (சுந்தரர் 80-10)
- குன்றாத் தமிழ் (சம்பந்தர் 18)
- கொழுந் தமிழ் (கனிச்சாறு 1 பக் 9)
- கோதில் தமிழ்
- கோலத் தமிழ்
- கோவைத் தமிழ் (திவ்வியப்பிரபந்தம் 1367)
- சங்கத் தமிழ் (திவ்வியப்பிரபந்தம் 503)
- சங்கத் மலி செந்தமிழ் (சம்பந்தர் 332)
- சந்தத் தமிழ் (திருப்புகழ் 860 - செந்தமிழ்ச்செல்வம் 67)
- சந்த நிறை தண்டமிழ் (சம்பந்தர் 355)
- சந்தம் ஆர் தமிழ் (சம்பந்தர் 305)
- சந்தம் ஆர்ந்து அழகாய தண்டமிழ் (சம்பந்தர் 225)
- சந்தம் மிகு தண்டமிழ் (சுந்தரர் 4-10)
- சந்த மதுரத் தமிழ் (தனிப்பா)
- சந்தம் ஆர் தமிழ் (சம்பந்தர் 305)
- சந்தமின் தமிழ் (சம்பந்தர் 114)
- சந்துலாந் தமிழ் (சம்பந்தர்245)
- சித்திரத் தமிழ் (திருப்புகழ் 1265)
- சீர் ஒன்புறுஞ் செந்தமிழ் (சம்பந்தர் 214)
- சீர் உறை தண்டமிழ் (சுந்தரர் 84-10)
- சீர் ஊர் செந்தமிழ் (சுந்தரர்26-10)
- சீர்த் தமிழ் (அருடபா)
- சீர்மலி செந்தமிழ் (திவ்வியப்பிரபந்தம் 161)
- சீர்மன்று செந்தமிழ் (திவ்வியப்பிரபந்தம் 1137)
- சீர் மிகுந்த தமிழ் (சம்பந்தர் 60)
- சீர் வண்ண ஒண்டமிழ் (திவ்வியப்பிரபந்தம் 3127)
- சீரார் தமிழ் (சம்பந்தர் 37)
Thursday, 7 August 2014
தமிழுக்குரிய அடைமொழிகள் - 2
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment