- சீரார்ந்த தமிழ் (திவ்வியப் பிரபந்தம் 740)
- சீரின் மலி செந்தமிழ் (சம்பந்தர் 333)
- சுவைத்தமிழ்
- செஞ் சொற்றமிழ் (சுந்தரர் 42)
- செந்தண்டமிழ் (சம்பந்தர் 182)
- செந்தமிழ் (சம்பந்தர் 41,மலரும் மாலையும் 1258)
- செப்பரியதண்டமிழ் (சம்பந்தர் 100)
- செம்மைத்தமிழ்
- செய்யதமிழ் (வேதாந்த தேசிகர், மலரும் மாலையும் 1057)
- செல்வச் செந்தமிழ் (புலவர் ப. கோவிந்தன்)
- செறிதரு தமிழ் ( திருவலஞ்சுழி மும்மணிக் கோவை)
- செறிவண்டமிழ் (சம்பந்தர் 199)
- சொல்லார் தமிழ் (சம்பந்தர் 31,171)
- சொல் வழுவாத ஒண்டமிழ் (திவ்யப்பிரபந்தம் 3083)
- சொற்றமிழ் (சம்பந்தர் 274)
- ஞாலம் அளந்த மேன்மைத் தமிழ் (பெரிய புராணம்)
- ஞாலம் மல்குந் தமிழ் (சம்பந்தர் 212)
- ஞாலம் மிக்க தண்டமிழ் (சம்பந்தர் 51)
- ஞானத் தமிழ் (சம்பந்தர் 117-12 ,திருப்புகழ்718,திவ்வியப்பிரபந்தம் 2182)
- தக்க தென் தமிழ் (சம்பந்தர் 218-7)
- தகு தமிழ் (சம்பந்தர் 13)
- தகை மலி தண்டமிழ் (சம்பந்தர் 44)
- தண்டமிழ் (சுந்தரர் 84-10)
- தண்ணார் தமிழ் (திருவாசகம் 8 -10)
- தலமார் தரு செந்தமிழ் (சம்பந்தர் 160)
- தவம் மல்கு தமிழ் (சம்பந்தர் 112)
- தன்னேர் இலாத தமிழ் (தமிழியக்கம் 90)
- தனித் தமிழ்
- திணை கொள் செந்தமிழ் (சுந்தரர் 18-10)
- தித்திக்கும் செந்தமிழ் (மலரும் மாலையும் 1043)
- தித்திக்கும் தமிழ்
- திரிசங்கத் தமிழ் (திருபுகழ் 69)
- திருத்தமிழ் (கந்தபுராணம் 4-13-231)
- திருந்து தமிழ் (சிவப்பிராகாசர் தனிப்பா)
- திரு நெறித்தமிழ்
- திரு நெறிய தமிழ் (சம்பந்தர் 1)
- திரு மலிந்த தமிழ் (தமிழியக்கம்)
- திஞ்சுவைத் தமிழ்
- தீதிலா ஒண்டமிழ் (திவ்வியப்பிரபந்தம் 3567)
- தீந்தமிழ் (தமிழியக்கம் 108)
- துய்ய தமிழ் (தனிப்பா)
Thursday, 21 August 2014
தமிழுக்குரிய அடைமொழிகள் - 3
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment