தமிழுக்குரிய அடைமொழிகள் - 4
- துளங்கில் தமிழ் (சம்பந்தர் 13)
- தெரி தமிழ் (திருப்புகழ் 592)
- தெள்ளு தமிழ் (தனிப்பா செந்தமிழ்ச்செல்வம் 45, கனிச்சாறு1 பக் 11,திருப்புகழ் 619-1290 ,கவியோகி)
- தெள்ளுற்ற தமிழ் (பாரதியார்)
- தெனி தரு முத்தமிழ் (கந்தர் அந்தாதி 25)
- தென் தமிழ் (சம்பந்தர் 218 -7)
- தென்னன் தமிழ் (திவ்வியப்பிரபந்தம் 2674 திருவிசைப்பா 24-3)
- தேக்குறு தமிழ் (கந்தர் அந்தாதி 2-26-4)
- தேமரு தமிழ் ( செந்தமிழ்ச்செல்வம் 1)
- தேன் ஆர் இன்சொல் தமிழ் (வில்லிப்பாரதம் 1277)
- தேன் தமிழ் ( கனிச்சாறு1 பக் 109)
- தேன் நேர் ஆர் தமிழ் (சம்பந்தர் 126)
- தேனினும் இனியநற் செந்தமிழ் (கா.நமச்சிவாயர்)
- நல்ல செந்தமிழ் (சம்பந்தர் 218)
- நல்ல தமிழ் (சம்பந்தர் 327)
- நல்லவாய இன்தமிழ் (சம்பந்தர் 308)
- நல்லிசைத் தமிழ் (திவ்வியப்பிரபந்தம் 718)
- நல்லியனின் தமிழ் (திவ்வியப்பிரபந்தம் 751)
- நலங்கொள் தமிழ் (சம்பந்தர் 14)
- நலத் தமிழ் (சுந்தரர் 3-10,55-4)
- நற்றமிழ் (திவ்வியப்பிரபந்தம் 697,சுந்தரர் 53-10,சமபந்தர் 39,44)
- நாடவல்ல தமிழ் (சம்பந்தர் 281,283)
- நிலைப்புற்ற தமிழ் (தமிழியக்கம் 106)
- பசுந் தமிழ் (கனிச்சாறு 1 பக் 10)
- படமலிதமிழ் ( சம்பந்தர் 121)
தொகுப்பு மேற்கோளுடன் உள்ளது. பாராட்டி மகிழ்கிறேன்.
ReplyDelete